உள்ளூர் செய்திகள்

நினைத்ததைச் சொல்கிறேன்!

உங்கள் ஃப்ரெண்டைக் கூப்பிடுங்கள். “எனக்கு உன் மனசு தெரியும். நீ நினைப்பது தெரியும்” என்று சும்மாச் சொல்லுங்கள். ஃப்ரெண்ட் குழம்பும்போது, ஒரு வித்தையை ஆரம்பியுங்கள்.“உன் மனசுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ. அதை நான் சரியாச் சொல்றேன்' என்று சவால் விடுங்கள்.அடுத்தது வழிமுறை.(1) “ஒண்ணுலேருந்து ஒன்பதுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ.(2) அதை ரெண்டால பெருக்கு.(3) அஞ்சைக் கூட்டு.(4) அதை ஐம்பதால் பெருக்கு. (5) அதோட 1766‍ஐக் கூட்டு. (இந்தா கால்குலேட்டர்.)(6) அதிலிருந்து நீ பிறந்த வருஷத்தை ஃபுல்லா - நாலு டிஜிட்டையும் - எழுதிக் கழிச்சிடு.”ஆயிற்றா? இப்போது 'என்ன விடை வருது' என்று கேளுங்கள். ஃப்ரெண்ட் ஒரு மூன்று இலக்க எண்ணைச் சொல்வார். அதில் முதல் இலக்கம்தான் ஃப்ரெண்ட் தன் மனதில் நினைத்த எண். மீதி ரெண்டும்?அது அந்த ஃப்ரெண்டின் வயது!“உனக்கு இப்போ இத்தனை வயசு ஆகியிருக்கணுமே' என்று சொல்லுங்கள். ஆச்சரியப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !