உள்ளூர் செய்திகள்

இந்த வார முக்கிய தினங்கள்

11.04.1869: கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக, தானும் உழைத்தவர். தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்குகொண்டு சிறை சென்றவரும், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியுமான கஸ்தூரிபா பிறந்தார்.13.04.1919: வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக் திடல். டையர் என்கிற ராணுவ அதிகாரியின் தலைமையில் அங்கே கூடியிருந்த மக்களை ஆங்கிலேய ராணுவம் கண்மூடித் தனமாகச் சுட்டது. 13.04.1930: சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுடன் இருக்கும் இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார், விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தார்.15.04.1452: புகழ் பெற்ற இத்தாலிய கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், சிற்பி, ஓவியர் என பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். 'கடைசி விருந்து' (The Last Supper), 'மோன லிசா' (Mona Lisa) போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்த லியோனார்டோ டா வின்சி பிறந்தார்.17.04.1975: ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்தவர். இவருடைய பிறந்த நாள் 'ஆசிரியர் தினமாக' செப்டம்பர் 5ல் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. வீ. ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் 'சர்வபள்ளி' ராதாகிருஷ்ணன் மறைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !