உள்ளூர் செய்திகள்

தூய நீர் தேடி...

அனைவருக்கும் குடிநீர் கிடைத்தாலும், அது சுத்தமான குடிநீரா? அறிவியல், தொழில்நுட்பம் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பல ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஓர் ஆச்சரிய நபர் செயற்பட்டு வருகிறார். “சுத்தமான குடிநீர் என்பது, எந்தவித பேதமும் இல்லாமல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்கிறார் பேராசிரியர் டேவிட் ரெக்கோ. சமூகப் பிரச்னைக்கு ஒருங்கிணைத்தல்அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் ரெக்கோ (David Reckhow), குடிநீர் ஆய்வில் மிகவும் பிரபலம். அவருடைய ஆய்வில் பலரையும் ஈடுபடுத்தி வருகிறார். தம் சோதனைக் கூடத்தில் பல ஆய்வாளர்களின் குடிநீர் மாதிரிகளைச் சோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். பழைய ஷெட் போல இருந்த ஓர் இடத்தைத்தான் டேவிட் ஆய்வுக்கூடமாக மாற்றினார். பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், அதை ஒட்டியுள்ள இந்த ஆய்வுக்கூடத்திற்குத்தான் வருகிறார்கள்.ஆய்வுக்கூடத்துக்கு கிடைத்த மறுவாழ்வுஅமெரிக்காவில் 1970-களில் தண்ணீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தண்ணீர் சார்ந்த விதிகள் கடுமையாக்கப்பட்டன. அதன் காரணமாகத் தண்ணீரின் சுத்தத் தன்மையைக் கண்டறிய அம்ஹெர்ஸ்ட் (Amherst) டவுனில் ஆய்வுக்கூடம் ஒன்று அப்போது தொடங்கப்பட்டது. காலப்போக்கில் நிதிப் பற்றாக்குறையால் ஆய்வகம் பாதியிலேயே மூடப்பட்டது. நாளடைவில் ஆய்வகம் இருந்த இடம் ஷெட் போல ஆனது. யாரும் கவனிக்காமல் விட்ட இந்த ஷெட்டைத்தான் நண்பர்களின் உதவியோடு பழையபடி ஆய்வகமாக மாற்றினார் டேவிட்.தோள் கொடுக்கும் நண்பன்!* தூய்மையான குடிநீர் கிடைப்பதற்கான ஆய்வில் ஈடுபடுவோர்க்கு உதவும் வகையில் பல லட்சங்கள் செலவழித்து நவீன ஆய்வுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இருக்கின்றன. * நண்பர்கள் பலர் பணம் வழங்கியும், பழைய மாடல் உபகரணங்களை புதுப்பித்தும் ஆய்வகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.- சு.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !