மழையில் ஆட்டம்!
குளுகுளுன்னு காத்தடிக்குதுமண்ணு வாசம் வீசுதுபளபளன்னு மின்னலடிக்குதுகண்ணு எனக்குக் கூசுது.கடகடன்னு இடி இடிக்குதுகாத்து பயம் கூட்டுதுசடசடன்னு சத்தங்கேக்குதுசட்டுனு மழை ஊத்துது.குடுகுடுன்னு ஓடிக்குதிச்சுமழையில் ஆட்டம் போட்டேங்க.கடுகடுன்னு கோபத்தோடஅம்மா என்னைப் பார்த்தாங்க.திருதிருன்னு முழிச்ச என்னைதிட்டித் திட்டித் தீர்த்தாங்க.தரதரன்னு பிடிச்சிழுத்துவீட்டுக்குள்ளே சேர்த்தாங்க.வெடவெடன்னு குளிரில் உடம்புவெலவெலத்துப் போனதுகிடுகிடுன்னு காய்ச்சலேறிநடுநடுங்கிப் போனது.படபடன்னு அம்மா வந்துபார்த்து பயந்து போனாங்கவிடுவிடுன்னு பத்து அரைச்சுநெத்தியிலே போட்டாங்க.பொலபொலன்னு விடிஞ்சதுமழையும் நின்னு போனதுகலகலன்னு சிரிப்பு வந்ததுகாய்ச்சல் ஓடிப் போனது.-கீதாமதிஇந்தப் பாட்டில் ஒரு குட்டிக் கதை இருக்கிறது. அதைத் தவிர, வேறு எது உங்கள் கண்ணில் பட்டது? ஏதோ ஒருவகையில் இசைந்து போகும் சில சொற்கள். ஆம். அவற்றிற்கு இரட்டைக் கிளவி என்று பெயர். சலசல, படபட… இது போன்ற சொற்களை சல+சல என்று பிரித்தால் ஒரு 'சல'வுக்குப் பொருள் கிடையாது.