உள்ளூர் செய்திகள்

பசியால் வாடும் மக்கள் மோசமான இடத்தில் இந்தியா

உலக நாடுகளின் பசிப் பட்டியல் (Global Hunger Index - GHI), கடந்த 13 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. சிசு இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வயதுக்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றால், அந்நாட்டில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைவு; 100வது இடத்துக்கு மேல் இடம்பெற்றால், அந்நாடு மிக மிக மோசமான நிலையில் உள்ளது எனப் பொருள்.2018ஆம் ஆண்டுக்கான பட்டியலை, அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைடு (Concern Worldwide) நிறுவனமும், ஜெர்மனியின் வெல்டுங்கர்ஹிலைஃப் (Welthungerhilfe) நிறுவனமும் வெளியிட்டுள்ளன. 119 நாடுகள் உள்ள இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 103வது இடத்தில் உள்ளது. நம் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே நமக்கும் கீழே (106) உள்ளது. 2014இல், இந்தியா 55வது இடத்தில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !