உள்ளூர் செய்திகள்

கச்சா எண்ணெய் நுகர்வு முதலிடம் நோக்கி இந்தியா!

வரும் 2035ல், கச்சா எண்ணெய் அதிகம் நுகரும் நாடுகளில், இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பயன்பாட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியா தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுபற்றி பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், '2015ல், இந்தியாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு, 41 லட்சம் பேரல்கள். இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு, ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் போனால், வரும் 2035ல், 92 லட்சம் பேரல்களாக பயன்பாடு உயரும். அப்போது, உலகிலேயே அதிகம் கச்சா எண்ணெய் நுகரும் நாடாக இந்தியா மாறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !