இந்திய மாணவர் சாதனை
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் வசிக்கும் மாணவன், முகுந்த் வெங்கடகிருஷ்ணன். இந்தியாவின் பெங்களூரு இவரது பூர்வீகம். காது கேட்கும் கருவி விலை அதிகமானதாக இருந்ததால், இதற்கு மாற்று கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். 'கம்ப்யூட்டர் ப்ராசஸர்' போன்ற ஒரு உபகரணத்தைக் கண்டுபிடித்தார். இதன் விலை, 4,000 ரூபாய்தான். இந்தக் கருவியை, கென்டகி மாகாண அறிவியல் பொறியியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தார். அக்கருவி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.