உள்ளூர் செய்திகள்

தனித்தனி தனிமங்கள்!

தனிமத்தின் மிகச்சிறிய அலகுதான் அணு! அணுவை புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற நுண்ணிய அணுத்துகள்களாக பிரிக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (Molecules / மாலிக்யூல்ஸ்) உருவாக்குகின்றன.ஒரு தனிமத்தின் அலகான அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டன்களின் எண்ணிக்கையைக் குறிப்பதுதான் அணு எண். மொத்தம் 118 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் முதல் 94 தனிமங்கள், இயற்கையில் கிடைக்கின்றன. மீதமுள்ள 24 தனிமங்கள், செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு ஆய்வு செய்யப்படுகின்றன. தனிமங்களின் பெயர்கள், அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும், அணு நிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படி அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. 1869ல் டிமிட்டி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர், இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர்தான் மோஸ்லே என்பவர், தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !