கைதைப் பூ
உலகம் முழுக்க தினமும் ஆயிரக்கணக்கான பூக்கள் மலர்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் பெயர்கள்தான் நமக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வரும். அப்படி ஞாபகத்தில் வரும் சில பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், மகிழம்பூ, தாமரை, இருவாட்சி, தாழை (தாழம்பூ), ரோஜா என்று சொல்லலாம். இவற்றில் ஒன்றின் பெயர் மட்டும் பழங்காலத்தில் கைதை என்று அழைக்கப்பட்டது. என்னது பூவுக்கு பெயர் கைதையா? சரியான கதையா இருக்கே என்று யோசிக்கிறீர்கள்தானே! அந்தக் கைதைப் பூ எது தெரியுமா?ஒரு க்ளூ. அந்தப் பூ மிக மிக வாசனை மிக்கது. அந்தப் பூ பிரம்மனுக்காகப் பொய் சொன்னதாய் ஒரு புராணக் கதை உண்டு. இப்போ புரிந்து விட்டதா அந்தப் பூ எதுவென்று!விடை: தாழம்பூ.பேய் என்று ஒரு செடிக்குப் பெயர் இருக்கிறது. அந்தச் செடி கற்றாழை!