கர்நாடகம்: தனிக்கொடி அறிமுகம்
கர்நாடக மாநிலத்திற்குத் தனிக்கொடியை அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா அறிமுகப்படுத்தி உள்ளார். மாநிலத்திற்கான தனிக்கொடியை வடிவமைக்க குழு ஒன்றை, கடந்தாண்டு அம்மாநில அரசு அமைத்தது. அக்குழுவினர் கடந்த வாரம் கர்நாடக அரசிடம் புதியதாக வடிவமைக்கப்பட்ட கொடியைக் கொடுத்தனர். மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் இக்கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் ஒப்புதல் பெற இக்கொடி, விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தேசியக் கொடி இருந்தபோதும், மாநிலத்துக்கு என தனிக் கொடி வேண்டும் என அம்மாநில மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.