மாறுவேட மன்னர்
ராமு அத்தை வீட்டுக்கு வந்திருந்தான். அந்த சின்ன ஊருக்கு வந்த சில நாட்களிலேயே அனைவரிடமும் புத்திசாலி எனப் பெயர் எடுத்திருந்தான். ஒரு மாலை வேளையில் ராமு தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது ராஜா அந்த வழியாக வந்தார். அங்கிருந்த விவசாயி ஒருவர் மன்னர் வருகையால் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்து ''வருக அரசே! வருக!'' என வரவேற்றார்.மன்னர் சோகமாக, ''இப்போது நீங்கள் அரசே என அழைக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. நம் நாட்டின் தளபதி வஞ்சகம் செய்து என்னை விரட்டிவிட்டு அரச பதவியில் அமர்ந்துவிட்டான்'' என்றார். நயவஞ்சகனாக இருக்கும் தளபதியின் ஆட்சியில் மக்கள் மிகவும் துன்பப்படப் போகிறார்கள் என வருத்தப்பட்டார். விவசாயி தன்னிடம் இருக்கும் எதைப் போட்டாலும் நூறாக்கும் செப்புப் பானை பற்றிச் சொன்னார். ராமு சிறுவனாக இருப்பதால் அவனைப் பற்றிக் கவலையே படாமல் மன்னரும் விவசாயியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.''பானை…அண்டா என எதுவாக இருந்தாலும் போர்வீரர்கள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு என்ன செய்வது?''இப்போது ராமு குறுக்கிட்டு, ''அரசே! நீங்கள் இந்தத் தோற்றத்தில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஓரிரு மாதங்களுக்கு ஒரு விவசாயி போன்ற வேடத்தில் இங்கேயே தங்கியிருங்கள். வயலில் வேலை செய்யுங்கள். நாங்கள் வேலைக்கு ஆள் கூட்டிவருவது போல தினமும் கொஞ்சம் மக்களை அழைத்துவருவோம். அவர்களிடம் பேசி, மக்களை ஒன்றிணைத்து பிறகு கோட்டையை முற்றுகை இடுங்கள்!'' என்றான். “நீ வயதில் சிறியவனாக இருந்தாலும் உன் யோசனை பலமாக இருக்கிறது” என்று மன்னர் பாராட்டினார். பிறகு ராமு சொன்னபடியே இரண்டு மாதங்களுக்குப் பிறகு படை திரட்டிப் போய் கோட்டையைக் கைப்பற்றினார். நாட்டுக்கு நல்லாட்சி தந்தார். செ.பிரியங்கா எட்டாம் வகுப்பு, கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.