மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி
சாந்தி: ஏய் மஞ்சு... பார்த்தும் பார்க்காத மாதிரி இவ்ளோ ஸ்பீடா எங்க போற? ஸ்கூல்ல வந்தே மாதரம் சாங் போட்டுட்டாங்க. கேக்குதா?மஞ்சு: ஆரஞ்சு மிட்டாய் எங்கே கிடைக்கும்? சா: கடையில இருக்கிற எல்லா சாக்லேட்டும் சாப்பிட்டு முடிச்சாச்சு. இந்த ஒண்ணு மட்டும் மிச்சமா?ம: “நாங்க ஸ்கூல் படிக்கும்போது, சுதந்திர தினத்துக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பாங்க. செம டேஸ்ட்டா இருக்கும்”னு அப்பா சொன்னாங்க! அதான் ஒவ்வொரு கடையா தேடிட்டு இருக்கேன்.சா: இந்தியாவிலேயே முதன்முறையா, ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட இப்படி ஒரு காரணம் சொன்னது நீயாத்தான் இருக்கும்.ம: ஒவ்வொரு வருஷமும் நம்ம ஸ்கூல்ல லட்டும் ஜாங்கிரியும்தான் கொடுக்குறாங்க. ஒரு சேஞ்சுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தா என்னவாம்?சா: ரத்தம் சிந்தி, கஷ்டப்பட்டு, போராடி வாங்கிய சுதந்திரத்தையும் அதுக்காகப் பாடுபட்ட தலைவர்களையும் நினைக்கிறப்போ அவங்க நினைவுகள் இனிப்பா இருக்கணும்னுதான் ஸ்வீட் கொடுக்குறாங்க. ம: ஓ... அப்படின்னா சுதந்திர தினம் மாசத்துக்கு ஒருமுறை கொண்டாடலாமே… ஸ்வீட்டா நினைவில் வச்சுக்கிட்டே இருக்கலாம்.சா: நாட்டுப்பற்றோட பேசு மஞ்சு. எப்போப் பார்த்தாலும் சாக்லேட் ஞாபகத்துலயே இருக்காதே.ம: சரி... சரி... நாட்டுப்பற்றைக் கொஞ்சம் பற்ற வை, எனக்குள்ளேயும் பத்தி எரியட்டும். ஹி... ஹி...சா: இந்த நாள்ல, நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப் பிரதமர் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும் வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் மக்களுக்கு அறிவிப்பார்.ம: அது இருக்கட்டும். நம்ம நாட்டு மக்கள் எல்லாரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுறாங்களா? இன்னைக்கு சுதந்திர தினம்ன்னு எல்லாருக்கும் தெரியுமா?சா: பேப்பர், டி.வி., எஃப்.எம். இப்படி எங்க திரும்பினாலும் சுதந்திர தின வாழ்த்துகள் அறிவிச்சுட்டே இருப்பாங்களே.ம: இந்த வசதிகள் எல்லாம் இல்லாத மக்களுக்கு எப்படித் தெரியும்?சா: நொச்சு பண்ணிட்டே இருக்குற மஞ்சுவா இன்னைக்கு நச் நச்சுன்னு கேள்வி கேக்குறது?ம: ஷாக் ஆகாத. எல்லாரோட வீட்லயும் ரேஷன் கார்டு இருக்கு. ஒரு வாரத்துக்கு முன்னாலயே ரேஷன் கடையில ஸ்வீட் கொடுத்து வாழ்த்துகள் சொன்னா எல்லாரும் கொண்டாடுவாங்க.சா: வாவ்வ்வ்வ்... உனக்கு ஏத்த மாதிரி நல்ல ஐடியா!