உள்ளூர் செய்திகள்

மொழி விளையாட்டு

வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று - இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள். மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இரு பொருள் தரும்படி அழகாகப் பேசுவதை 'சிலேடை' என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜகந்நாதன். அவருடைய சிலேடைப் பேச்சுகளில் சில…ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்!சில பேருக்கு வாய் பேசிக் கொண்டிருக்கும்போது கூட கைகள் தானாக ஏதாவது சேட்டை செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இயல்புடைய ஒரு பேச்சாளர் ஒரு விழா மேடையில் கி.வா.ஜகந்நாதன் அருகில் அமர்ந்திருந்தார். கி.வா.ஜ.வுக்கும், அவருக்கும் மாலை போட்டு மரியாதை செய்தார்கள். கி.வா.ஜ.வுடன் பேசியபடி இருந்த அவரது கரங்கள் மாலையிலிருந்து ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்ட வண்ணம் இருந்தன. இயல்பாக அவர் செய்து கொண்டிருந்த இந்தச் செயல், கி.வா.ஜ.வுக்குச் சங்கடமாக இருந்ததால் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, ''ஐயா, ஆரம்பிக்கலாமா?'' என்று கி.வா.ஜ.விடம் கேட்டார். உடனே பளிச்சென்று ஒரு பன்ச் அடித்தார் கி.வா.ஜ..- ''நான் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். இவர் ஏற்கனவே ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்'' என்று! சாகையில வந்து பார்!பெரும் புலமை பெற்ற ஒருவர், பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். 'பாடும்போது பார்க்க வேண்டும்' என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், “அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். 'சாகை' (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். 'வீட்டில் வந்து பார்' என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.அடியேன் வணக்கம்!வயதான புலவர் ஒருவர், கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, “வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, “அடியேன் வணக்கம்” என்றாராம்.கடைமடையர்!ஒரு மடத்தின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தது. வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலந்துகொண்ட கூட்டம். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டு இருக்கும்போது, வேக வேகமாக வந்து சேர்ந்தவர் கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவர். அவரைப் பார்த்ததும் மடாதிபதி சொன்னார்: “வாருங்கள் கடைமடையரே…” அதற்கு வந்தவர் அமைதியாகச் சொன்னார்: “வணக்கம் மடத் தலைவரே…”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !