உள்ளூர் செய்திகள்

பூமியில் விழுந்த மிகப்பெரிய விண்கல்

பூமியில் விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரியது, 'ஹோபா விண்கல்' (Hoba Meteorite - ஹோபா மெட்டியோரைட்). இது 1920ல் கண்டுபிடிக்கப்பட்டது. நமீபியா (Namibia) நாட்டில் உள்ள 'ஹோபா' என்னும் விவசாயப் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டது. எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விழுந்திருக்கலாம் என, கணக்கிடப்பட்டு உள்ளது. தட்டை வடிவத்தில் இருந்ததால், குறைவான வேகத்தில் பூமியின் மீது மோதி விழுந்துள்ளது. அதனால் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல்லில் உள்ளவை:* இரும்புத்தாதுகள் - 82.4 சதவீதம்* நிக்கல் - 16.4 சதவீதம் * கோபால்ட், பாஸ்பரஸ், செம்பு, துத்தநாகம், கார்பன், சல்பர், குரோமியம், இரிடியம், ஜெர்மனியம் போன்ற மூலகங்கள் சிறிய அளவில் உள்ளன.இந்த விண்கல் விழுந்த இடத்திலேயே பாதுகாத்து வருகின்றனர். இது சுற்றுலா இடமாக மாறியுள்ளது. நமீபியா அரசு, 1955ல் இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த விண்கல்லை கௌரவிக்கும் வகையில், தபால்தலையாகவும் வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தினமும் இந்த விண்கல்லைக் காண ஆர்வத்துடன் வருகின்றனர்.- ப.கோபாலகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !