ரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, ஐரோப்பவைச் சேர்ந்த 'லாரஸ்' (Laureus) என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. மொனாகோவில் நடைபெற்ற 18வது விருது வழங்கும் விழாவில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரருக்கு இந்த ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டிற்கான 'சிறந்த விளையாட்டு வீரர்', 'மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு பிரிவுகளில் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றதன் மூலம், ரோஜர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்மூலம் சர்வதேச தர வரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.