மேலே மேலே போகலாம்
வானம்வரை சுற்றுதிந்த ராட்டினம் - நம்வயிற்றுக்குள்ளே நடக்குதொரு நாட்டியம்கீழிருந்து கடைகள் எல்லாம் தெரிந்தது - பெட்டிமேலே போக ஊர் முழுக்கத் தெரியுதுசிலுவை வைத்த ஏசு கோயில் பக்கமாய் - ராமர்கோபுரமும் மசூதியும் நிற்குதுபள்ளிக்கூட சுற்றுச்சுவர் ஓரமாய் - ஒருதோல்வியுற்றோர் பயிற்சிக்கூடம் தெரியுதுநாயைத் துரத்திட்டு ஒருத்தன் ஓடுறான் - தாத்தாரோட்டைக் கடக்க வேறொருத்தன் உதவுறான்கீழிருந்தால் கடையை மட்டும் பார்க்கலாம் - நாம்மேலே போனால் நிறைய நிறைய பார்க்கலாம்வானம்வரை சுற்றுகின்ற ராட்டினம் - நம்மனசுக்குள்ளே நடத்தியது நாடகம்- ரமேச்சு