கடந்த வார உலகம் - நான்கில் ஒன்று பார்க்கலாம்!
ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே விடையைப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி சரியான விடையைக் கண்டுபிடியுங்கள்.1. தமிழகத்தில் புதிதாக உதயம் பெற்ற 33வது மாவட்டம்?அ) மயிலாடுதுறை ஆ) தென்காசி இ) ஆத்தூர்ஈ) கள்ளக்குறிச்சி2. தமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக சமீபத்தில் பதவியேற்றவர்?அ) பொன் மாணிக்கவேல்ஆ) பன்வாரிலால் புரோகித் இ) ராஜகோபால்ஈ) பூங்குன்றன்3. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான மைதானத்தின் கட்டுமானப் பணிகள் எங்கு முடிவடைந்துள்ளன?அ) டோக்கியோ ஆ) வியட்நாம்இ) கத்தார்ஈ) பீஜிங்4. நாட்டிலேயே, மிக இளம் வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ______________ மாநிலத்தைச் சேர்ந்த _____________________ பெற்றார்?அ) சிக்கிம், ரஞ்சன் கோகாய், வயது 22ஆ) இராஜஸ்தான், மயங்க் பிரதாப் சிங், வயது 21இ) கர்நாடகம், சுனில் ஹுக்கேரி, வயது 20ஈ) கேரளம், மேனகா நாயர், வயது 245. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளுக்கு அதிக அபராதம் விதித்த மாநிலம் எது? அ) உத்தரப்பிரதேசம் ஆ) தமிழகம் இ) டில்லிஈ) கோவா6. உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானிக்கு எத்தனையாவது இடம்?அ) 13ஆ) 5இ) 9ஈ) 127. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை எந்த மாதத்துக்குள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது? அ) மார்ச்ஆ) ஏப்ரல்இ) மேஈ) விற்பனை செய்யப்போவதில்லை8. இலங்கை பிரதமராக யார் பதவியேற்றுள்ளார்?அ) கோத்தபய ராஜபட்சஆ) மகிந்த ராஜபட்சஇ) பசில் ராஜபட்சஈ) சஜித் பிரேமதாசா9. இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்நிலையத்தில் புகார்களைப் பதிவு செய்யும் ரோபோ எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?அ) ஆந்திரம்ஆ) ஜார்கண்ட்இ) கேரளம்ஈ) உத்தரப் பிரதேசம்10. மக்களவையில், டில்லி மற்றும் உ.பி.யில் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றிப் பேசி சமீபத்தில் கவனத்தை ஈர்த்த எம்.பி. யார்? அ) ஹேமமாலினிஆ) சிராக் பாஸ்வான்இ) சுதீப் பந்தோபாத்யாஈ) சசி தரூர்விடை1) ஆ 2) இ 3) அ 4) ஆ 5) ஆ 6) ஈ 7) அ 8) ஆ 9) அ 10)அ