மின்னல் பென்டிகே
உலக கோப்பை (2018, ரஷ்யா) கால்பந்து தொடரின், ஐரோப்பிய பிரிவுக்கான தகுதிப் போட்டியில் பெல்ஜியம், ஜிப்ரால்டர் அணிகள் மோதின. மின்னல் வேகத்தில் பறந்த பெல்ஜியம் வீரர் கிறிஸ்டியன் பென்டிகே, 8.1 வினாடியில் முதல் கோலை பதிவு செய்தார். இது, 'ஃபிஃபா' நடத்தும் உலக கோப்பை கால்பந்து அரங்கில் அடிக்கப்பட்ட அதிவேக கோலாக அமைந்தது. இதில் பெல்ஜியம் 6 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.