நீளக் கொம்பன்
ஹெர்குலஸ் வண்டுஆங்கிலப் பெயர்: 'ஹெர்குலஸ் பீட்டில்' (Hercules Beetle)உயிரியல் பெயர்: 'டைனாஸ்டிஸ் ஹெர்குலஸ்' (Dynastes Hercules)வண்டு இனங்களிலேயே அளவில் பெரியது. காண்டாமிருக வண்டு வகையைச் சேர்ந்தது. மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்டது.உடல் கருப்பு, பழுப்பு, பச்சை, சிவப்பு என, பல நிறங்களில் இருக்கும். தலைப்பகுதியில் கொம்பு போன்ற நீளமான கொடுக்கு உடையது. தன் உடல் எடையைவிட பத்து மடங்கு அளவு எடையைத் தூக்கும் திறன் வாய்ந்தது; எட்டு கிலோ வரை தூக்கும்! அனைத்துண்ணியான இது, பெரும்பாலும் தாவரங்களையே உட்கொள்ளும். மரப்பட்டை, இலை, காய், பழம் போன்றவையே உணவு. சில சமயங்களில் பூச்சிகளையும் உண்ணும். நீளமான கொடுக்கைப் பயன்படுத்தி உணவைச் சிதைத்து உண்ணும். எலி, வௌவால், பறவை, ஊர்வன போன்றவை இவற்றின் எதிரிகள். ஒரு முறைக்கு 100 முட்டைகள் வரை இடும். முட்டைகள் வண்ணத்துப்பூச்சியைப் போல, லார்வா புழுக்களாகிப் பிறகு வண்டுகளாக உருமாறுகின்றன.நீளம் : 4 முதல் 17 செ.மீ. வரைகொடுக்கு நீளம் : 7 செ.மீ.எடை: 85 கிராம்வாழ்நாள் : 3 முதல் 5 மாதங்கள்- ப.கோபாலகிருஷ்ணன்