உள்ளூர் செய்திகள்

பட்டையைப் பாருங்க!

கடைகளில் விற்கப்படும் பொருட்களில் ஒரு குறியீடு பார்த்திருப்பீர்கள். தடிமனும் ஒல்லியுமாகப் பல நெடுக்குக் கோடுகள் போட்டு அவற்றின் கீழேயே ஏதேதோ எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் குறியீடு எதைக் குறிக்கிறது?அதுதான் பார்கோடு (Barcode). 'பார்கோடு' என்பது பொருட்களைப் பற்றிய தகவல்களை அறியப் பயன்படுத்தும் கணினிக் குறியீடு. இந்த டிஜிட்டல் குறியீட்டு (Digital Coding) முறையில் கோடுகள், இணைகோடுகள் இருக்கும். இந்தக் கோடுகள், அதற்கு இடையே உள்ள இடைவெளிகள் மூலம் பொருட்களைப் பற்றிய தகவல்களை அறியும்படி உருவாக்கப்படுகிறது. பார்கோடு என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், 'யுனிவர்சல் ப்ராடக்ட் கோடு' (Univarsal Product Code) என்பதே இதன் சரியான பெயர். பார்கோடுகள் 1D, 2D முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொருட்களை வகைப்படுத்துவது, இருப்பு சரிபார்ப்பது போன்ற விஷயங்களை எளிதாக்க உருவாக்கப்பட்டதுதான் பார்கோடு முறை. அமெரிக்காவைச் சேர்ந்த நார்மன் ஜோசப் வுட்லாண்ட் (Norman Joseph Woodland) 1940ஆம் ஆண்டு பார்கோடு முறையைக் கண்டுபிடித்தார். பெர்னார்டு சில்வர் (Bernard Silver) என்பவருடன் இணைந்து 1952ல் பார்கோடு முறைக்குக் காப்புரிமை (Patent) பெற்றார். பார்கோடில் உள்ள தகவல்களைப் படித்தறிய உதவும் கருவி பார்கோடு ஸ்கேனர் (Barcode Scanner). பார்கோடில் உள்ள முதல் மூன்று எழுத்துகள் அந்தப் பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை உணர்த்துகிறது. உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பார்கோடு 890 எனத் தொடங்கும். இத்தோடு, விலை, தயாரிப்புத் தேதி, தயாரித்த நிறுவனம் ஆகிய விவரங்களும் பதியப்பட்டு இருக்கும்.சில நாடுகளின் பார்கோடு குறியீடுகள்690 - சீனா50 - இங்கிலாந்து0013 - அமெரிக்கா & கனடா890 - இந்தியா1952 - 1960 ஆரம்ப காலத்தில் பார்கோடு முறையில் நான்கு பட்டைகள் மட்டுமே இருந்தன. வட்ட வடிவத்திலும் பார்கோடு வடிவமைக்கப்பட்டது. அமெரிக்காவின் ஓஹியோ நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஜூன் 26, 1974ல் பார்கோடு முறைப்படி முதன்முதலில் விற்பனை தொடங்கப்பட்டது. முதன் முதலில் விற்பனை செய்யப்பட்ட பொருள் ரிக்ளி'ஸ் சூயிங் கம் (Wrigley's Chewing Gum).பார்கோடு, பொருட்களுக்கு மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது.அறிவியல்: தேனீக்களின் முதுகில் சிறிய பார்கோடுகளைப் பதிவு செய்து அதன் மூலம் அவற்றின் இனப்பெருக்க முறைகளை ஆய்வு செய்கிறார்கள்.ராணுவம்: அமெரிக்க ராணுவத்தில் ஐம்பது அடி நீளமுள்ள கப்பல்களை வரிசைப்படுத்த இரண்டு அடி நீளமுள்ள பார்கோடுகளை ஒட்டுகிறார்கள். மருத்துவம்: மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு கையில் பார்கோடு பட்டை ஒட்டி அவர்களின் விவரங்களைப் பதிவு செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !