உள்ளூர் செய்திகள்

ஓட்டைப் பல்லை வளர வைக்கும் மருந்து

மனிதர்களுக்கு பற்களில் துளைகள் (cavities) விழுவது பெரும் பிரச்சனை. அதற்கும் தீர்வு வந்துவிட்டது. லண்டன் கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பற்களை முளைக்க வைப்பதற்கான மருந்து ஒன்றினை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். ஆம், தோல் பகுதியில் ஏதேனும் காயம் பட்டால் மீண்டும் தோல் வளர்ந்து மூடிக்கொள்வதை போலவே, இந்தப் புது மருந்து பல்லில் இருக்கும் குருத்தணுக்களை (Stem Cell) வலுவூட்டி டெண்டின் (dentin)எனப்படும் பகுதியை மீண்டும் வளரச் செய்கிறது. இதன் மூலம் பல் ஓட்டைகள் அடைபட்டு முழுமையான பற்கள் மீண்டும் கிடைக்கும்.இம்மருந்து இன்னும் சில கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே விற்பனைக்கு வருமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !