மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பெயர் மாற்றம்
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை 'சென்னை உயர்நீதிமன்றம்' என மாற்றலாம் என்பது உட்பட முக்கிய உயர்நீதிமன்றங்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை கொல்கத்தா உயர்நீதிமன்றம் எனவும், பாம்பே உயர்நீதிமன்றத்தின் பெயரை மும்பை உயர்நீதிமன்றம் எனவும் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. புது டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.