உள்ளூர் செய்திகள்

கடல் பவளப்பாறைகள் எதையும் எதிர்த்து நிற்கும்!

கடல்நீர் வெப்பமடைவதால், கடல் பவளப்பாறைகள் அழியும் என்று காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் சிலர் பீதியைக் கிளப்பி வந்தனர். ஆனால், அது உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் கரன்ட் பயாலஜி என்ற உயிரியல் ஆய்விதழில், 'பவளப்பாறைகளின் மீது பாதுகாப்பான அரண் போல் படிந்திருக்கும் கடற்பாசி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தது. 16 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்கள் காலத்திலிருந்தே காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அத்தனை மாற்றங்களையும் பவளப்பாறைகள் எதிர்த்துப் பிழைத்துள்ளன.6 கோடி ஆண்டுகளாக, பவளப் பாறைகளுக்கும் கடற்பாசிக்குமான உறவு உள்ளது.' என்று பேராசிரியர் லாஜியூனஸ் தெரிவித்துள்ளார். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !