உள்ளூர் செய்திகள்

மிருதுவான மெத்தை!

விண்வெளிப் பயணம் என்பது, ஏதோ பேருந்தில் ஏறிச் செல்வது போன்றதல்ல. புவியீர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு விண்வெளிக்குச் செல்லவேண்டும். அப்படிச் செல்லும்போது, அந்த விசை நம் உடலை அழுத்தும். இந்த அழுத்தத்திற்கு ஜிஃபோர்ஸ் (G-force) என்று பெயர். பெரும்பாலான அழுத்தத்தை விண்கலம் சமாளிக்கும். உட்கார்ந்திருக்கும் வீரர்களின் உடல் இருக்கைகளில் அமுங்கும். இருக்கைகளின் மெத்தைகள் இறுக்கமாக, கல்போல் இருந்தால், வலியும் வேதனையும் அதிகரிக்கும். 1966இல் இப்பிரச்னையைக் கையிலெடுத்தார் சார்லஸ் யோஸ்ட் (Charles Yost) என்னும் ஆய்வாளர். உடலை மென்மையாக அணைத்துக்கொள்ளும் குஷன் ஒன்றைக் கண்டுபிடித்து, அவற்றை இருக்கைகளில் தைத்தார். முதலில் டி-போம் (t-foam) என்று பெயரிடப்பட்ட இத் தொழில்நுட்பம், பிறகு ஸ்வீடன் (Sweden) நாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அவர்கள் அம்மெத்தையை மாற்றியமைத்து, இன்றைய படுக்கைகளை வடிவமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !