உள்ளூர் செய்திகள்

மெகா சைஸ் தொலைநோக்கி நாசா விண்வெளி மையம் சாதனை

உலகிலேயே மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை, நாசா உருவாக்கி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகம் நாசா. இது, 'ஹப்பிள்' (Hubble) என்ற அதிநவீன தொலைநோக்கியை, கடந்த 1990-ம் ஆண்டு, விண்ணில் செலுத்தியது. இதுவே, உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக இருந்தது. கடந்த 26 ஆண்டுகளாக, கிரகங்கள், நட்சத்திரங்கள் என, விண்வெளி குறித்த அரிய தகவல்களை, ஹப்பிள் தொலைநோக்கியில் விஞ்ஞானிகள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியுள்ளது. ஐரோப்பா மற்றும் கனடா நாட்டு விண்வெளி ஆய்வுக் கழங்கள், இந்த திட்டத்தில் பங்கேற்று உள்ளன. ஹப்பிள் தொலைநோக்கியைவிட, 10 மடங்கு அதிக செயலாற்றல் கொண்டது, வரும் 2018 அக்டோபரில், விண்ணில் ஏவப்படுகிறது. இதன்மூலம், பிரபஞ்சம் குறித்த புகைப்படங்கள், கூடுதல் துல்லியத்துடன் கிடைக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !