உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை: ரோசின் குளியல்: விடுபட்ட சொற்களைக் கண்டுபிடிக்கவும்

வயதான ____________(1) மரத்தின் உடலில் பொன் நிறத்தில் ரெசின் (Resin) என்னும் பிசுபிசுப்பான திரவம் வடியும். இது நாளடைவில் காற்று பட்டு ____________(2). இந்தக் கடினமான ரெசின், மரத்தில் இருந்து உடைத்து எடுக்கப்படும். இதோடு சில ____________(3) சேர்க்கப்பட்டு ரோசின் (Rosin) என்னும் சோப்புக்கட்டி போன்ற சிறிய செவ்வக அல்லது வட்டவடிவக் கட்டி தயாரிக்கப்படும். வயலின், வியோலா, செலோ, டபுள் பேஸ், சாரங்கி, தில்ருபா உள்ளிட்ட போயிங் கருவிகளின் போ-வில் (Bow) இது பயன்படும். நாம் தினமும் காலையில் சோப்பு போட்டுக் குளிப்பது போல போ-வுக்கு அவ்வப்போது ____________(4)குளியல் தேவைப்படும்.போ-வில் உள்ள ____________(5) முடிக்கற்றை மீது ரோசின் கட்டி முன்னும் பின்னும் அழுந்தத் தேய்க்கப்படும். இதனால் பௌடர் போன்ற வெண்ணிறத் துகள் ரோசினில் இருந்து உதிரத் தொடங்கும். ரோசின் துகள் ____________(6) கொண்டது. எனவே குதிரை முடிக்கற்றை மீது ஒட்டிக்கொள்ளும். ரோசின் துகள் போ-வில் மேலிருந்து கீழ்வரை சரிசமமாகத் தடவப்படும். துகள் போதுமான அளவு ஒட்டியுள்ளதா எனப் பரிசோதிக்க ____________(7) கலைஞர், குதிரை முடியைத் தனது விரல்நுனியால் லேசாகத் தொட்டுப் பார்ப்பார். துகள் விரல் நுனியில் ஒட்டினால் ரோசின் போதுமான அளவு உள்ளதாகப் பொருள். வயலின் கலைஞர், வயலின் வாசிக்க ____________(8) மீது ரோசின் தடவப்பட்ட குதிரை முடிக்கற்றையைத் தேய்ப்பார். இதனால் உலோகத் தந்திக்கும் ரோசின் துகள் படர்ந்த குதிரை முடிக்கற்றைக்கும் இடையே____________ (9) (Friction) ஏற்படும். இதனால் ஒலி அதிர்வு உண்டாகி ____________(10) பிறக்கும்.விடைகள்:1. பைன்2. இறுகிவிடும்3. ரசாயனங்கள்4. ரோசின்5. குதிரைவால்6. பசைத்தன்மை 7. வயலின் 8. தந்திகள்9. உராய்வு10. இசை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !