மனம் குவியும் இசை: பிரமாதமான ப்ளூஸ்
1. ப்ளூஸ் இசை என்றால் என்ன?இது, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் கறுப்பினத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசை வடிவம். இன்று உலகின் முன்னணி இசைக் கலைஞர்கள் பலர் ப்ளூஸ் இசைப்பிரிவில் சிறந்து விளங்குகின்றனர்.2. இது எவ்வாறு இசைக்கப்படுகிறது?நம்மூர் கோவில்களில் ஹரிகதா விற்பன்னர்கள் பாடல் மூலம் கதை சொல்வதுபோலவே ப்ளூஸ் கலைஞர் ரசிகர்களுக்குக் கதை சொல்வார். ப்ளூஸ் பாடல் வரிகளில் காதல், சோகம், மகிழ்ச்சி, அடக்குமுறைக்கெதிரான கறுப்பின மக்களின் ஆதங்கம், கோபம், அரசியல் புரட்சி என ஏதாவதோர் உணர்ச்சி நிரம்பி இருக்கும். 3. ஒரு ப்ளூஸ் கலைஞரின் செயல்பாடுப்ளூஸ் கச்சேரியில் ஒரு கிதார் அல்லது எலெக்ட்ரிக் கிதார் கலைஞர் மேடையின் நடுவில் அமர்ந்து அதனை வாசிப்பார். இவருக்கு உச்சஸ்தாயி ப்ளூஸ் பாடல்களைப் பாடும் குரல்வளமும் இருக்கவேண்டும். பாடல் முழுவதும் கிதாரில் ஒரு குறிப்பிட்ட கார்ட் பேட்டர்ன் (Chord pattern) திரும்பத் திரும்ப இசைக்கப்படும். இதற்கேற்ப டிரம்ஸ், கீபோர்டு, டபுள் பேஸ், சாக்ஸபோன் உள்ளிட்ட பின்னணி வாத்தியங்களும் இசைக்கப்படும்.4. ப்ளூஸ் இசை ஜாம்பவான் பிபி கிங்கின் பாடல் ஒன்றை விளக்குகபிபி கிங்கின் 'Three O'clock Blues' என்கிற பாடலை எடுத்துக்கொள்வோம். இந்தப் பாடல் முழுதும் 'Three O'clock' என்கிற வார்த்தை திரும்பத் திரும்ப வரும். மதியம் மூன்று மணிக்கு நடைபெறும் ஒரு சம்பவம் குறித்து இந்தப் பாடல் விளக்கும். பாடலில் கூறப்படும் கதை, மதியம் மூன்று மணியைச் சுற்றியே நடைபெறும்.