மனம் குவியும் இசை: முடியுமா, முடியாதா?
1) ஹார்மோனியம் கலைஞரால் பியானோவைத் திறம்பட வாசிக்க முடியுமா?முடியாது. ஹார்மோனியம் ஒரு சிறிய இசைக்கருவி. இதில் இசைக்கலைஞரின் வலது கை விரல்கள் மட்டுமே கட்டைகளை அழுத்தி வாசிக்கும். பியானோ வாசிக்க இரு கைகள் வேண்டும், மேற்கத்திய இசைக் குறிப்புகளைப் படிக்கத் தெரியவேண்டும். 2) வயலின் கலைஞரால் செலோ வாசிக்க முடியுமா?முடியாது. இரண்டிலும் வலது கையில் போ பயன்படுத்தப்படுவது ஒற்றுமை தான். ஆனால் சிறிய வயலின் பிங்கர்போர்ட் பயன்படுத்தும் வயலின் கலைஞரால் செலோவின் பெரிய ஃபிங்கர்போர்டில் விரல் வைத்து எளிதில் வாசிக்க முடியாது. 3) தபலா, மிருதங்க வித்வான்களால் மேற்கத்திய ஜெம்பே, பேங்கோஸ், தர்புகா வாசிக்க முடியுமா?முடியும். மிருதங்கம், கடம் வித்வான்களுக்கு அசாதாரணத் தாளஞானம் உண்டு. அதனால் ஜெம்பே, பேங்கோஸ் உள்ளிட்டவற்றை எளிதில் வாசிக்க முடியும். 4) நாதஸ்வர வித்வான்களால் டூபா வாசிக்க முடியுமா?முடியாது. மேற்கத்திய சிம்பொனியில் பயன்படுத்தப்படும் டூபா எனப்படும் ராட்சத பிராஸ் காற்றிசைக் கருவியில் இசை வரவழைக்க அதீத அழுத்தம் கொடுத்து ஊத வேண்டும். 5) எலெக்ரிக் கிதார், டிரம்ஸ், வயலின் வாசிப்போரால் சாதாரண கிதார், டிரம்ஸ், வயலின் வாசிக்க முடியுமா? முடியும். ஒரு ஜாஸ் எலெக்ட்ரிக் கிதார் கலைஞர் மரத்தாலான கிளாஸிக்கல் கிதாரை எளிதில் வாசித்துவிடுவார்.