மனம் குவியும் இசை: எஃபெக்ட் பெடல்: கேள்வி - பதில்
எஃபெக்ட் பெடல் (Effect Pedal) என்றால் என்ன?19ஆம் நூற்றாண்டில் மனிதக் குரலையும் இசைக் கருவிகளின் ஒலியையும் மாற்றியமைக்க உலகம் முழுக்க இசைக் கலைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. மேடைக் கச்சேரிகள், ஸ்டூடியோ பாடல் ஒலிப்பதிவில் இது பயன்பட்டது. ஒலியை அதிகரிப்பது (Gain), நீட்டிப்பது (Reverb), கோரஸ் ஒலி (Chorus), இயல்புத் தன்மையில் இருந்து மாற்றுவது (Distortion) ஆகியவற்றுக்கான மின்னணு சாதனம் எஃபெக்ட் பெடல்.எந்த இசைப்பிரிவில் பயன்பட்டது? ஆரம்பக் காலங்களில் இந்தப் பெடல் 'மெடல் மியூஸிக்' என்கிற இரைச்சலான மேலை நாட்டு இசைப் பிரிவிலேயே அதிகமாகப் பயன்பட்டது. உதாரணமாக ஒரு வயலினில் மைக் பொருத்தி அதனை எஃபெக்ட் பெடலுடன் பொருத்தி, ஒலி மாற்றம் செய்தால் மிருதுவான வயலின் இசை, எலெக்ட்ரிக் கிதார் போல அதிரும்.இதனைப் பயன்படுத்திய இசைக் கலைஞர்கள்? எல்விஸ் பிரிஸ்லி, மைக்கேல் ஜாக்ஸான், ஷ்ரியேல் க்ரூ, மடோனா, லேடி காகா.எந்த இசைக் கருவிகளின் ஒலி, இதன்மூலம் மாற்றம் அடையும்?சிந்தஸைசர், செலோ, வயலின், எலெக்ட்ரிக் கிதார்.இதனைப் பயன்படுத்த என்னென்ன திறன்கள் வேண்டும்?மின்னணுப் பொருட்களின் இன்புட், அவுட்புட் வயர் இணைப்பு பற்றிய அறிவு, ஒலி மாறுதல் செய்ய ஏற்ற அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் கேட்லாக்கைப் படித்து, சில ஆன்லைன் தரவுகளைப் படித்தே நம்மால் இந்த அறிவைப் பெற முடியும்.