மனம் குவியும் இசை: சரியா, தவறா?
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியானதா, தவறானதா என்று கண்டறியுங்கள்.1. எலெக்ட்ரிக் வயலினில் செலோவின் கீழ்ஸ்தாயி ஸ்வரங்களையும் கொண்டுவர முடியும்.2. கிதாரின் மர உடலைத் தட்டி தாள வாத்தியம் போலவும் பயன்படுத்த முடியும்.3. ஹார்மோனிக்கா, மோர்சிங், யூகுலேலே போன்ற சிறிய இசைக் கருவிகளை வாசிப்பது சுலபம்.4. டபுள் பேஸ், டூபா போன்ற அரிய இசைக்கருவிக் கலைஞர்களால் அதிகப் பணம், புகழ் ஈட்ட முடியாது.5. காற்று இல்லாத வெற்றிடத்தில் இசை பிறக்க வாய்ப்பே இல்லை.6. வயலின் கலைஞர்கள் கமகங்களை எளிதாக வாசிக்க விரல் நுனியில் எண்ணெய் தொட்டுக் கொள்வர்.7. டிரம்ஸ் செட்டை யார் வேண்டுமானாலும் குறுகிய காலப் பயிற்சி மூலம் இசைத்துவிட முடியும்.8. ஜலதரங்கம் ஒரு தென்னிந்திய இசைக்கருவி.9. ஸ்வாதி திருநாள் ராம வர்மா என்கிற கேரள மன்னர் ஓர் இசை மேதை.10. பியானோவின் 'குரொமேட்டிக் ஸ்கேல்' எனப்படும் 12 ஸ்வரங்கள் கொண்டு இசை அமைக்க முடியும்.விடைகள்: 1. சரி 2. சரி 3. தவறு 4. தவறு 5. சரி 6. சரி 7.தவறு 8. தவறு 9.சரி 10.சரி