மனம் குவியும் இசை: ஸ்வரங்கள் கேள்வி பதில்
1. சட்ஜமம் என்கிற ஸ்வரம் எந்தப் பறவையின் ஒலியில் இருந்து உருவானது?2. ஸ்வரத்தைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தை ஸ்வர். இதன் பொருள் என்ன?3. உச்சஸ்தாயி, கீழ்ஸ்தாயி, மத்தியஸ்தாயி ஆகியவை எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன?4. பொ.யு.மு. 200 - பொ.யு. 200 காலகட்டத்தில் உருவான எந்த சாஸ்திரத்தில், எத்தனையாவது அத்யாயத்தில் ஸ்வரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?5. 'ஷட்ஜஸ்ய ரிஷபக்ஷைவ காந்தாரோ மத்யமஸ்ததாஹ பஞ்சமோ தைவதஸ்சைவ சப்தமோத நிஷாதவான்'என்கிற சப்த ஸ்வரங்களைக் குறிக்கும் சமஸ்கிருத ஸ்லோகம், நாட்டிய சாஸ்திரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடைகள்:1. மயில்2. சத்தம் எழுப்புதல்3. சாமவேதம்4. நாட்டிய சாஸ்திரம் 28 ஆவது அத்யாயம்5. தத்ர ஸ்வரா