மொக்கை மஞ்சு! ஷார்ப் சாந்தி!
ஷார்ப்: ஏய் மஞ்சு! வா செல்ஃபி (Selfie) எடுக்கலாம்.மொக்கை: புதுசா டிரெஸ் எதுவும் இந்தப் பேர்ல வந்திருக்கா? இப்ப ஜவுளிக் கடைக்கு போறமா? ஷா: உங்கிட்ட வந்து இத சொன்னேன் பாரு… செல்ஃபிங்கற வார்த்தைக்கு 'சுயமாக படங்களை எடுப்பது' ன்னு அர்த்தம். அதான் அப்டி ஒரு பேரு. சுயமி, தன்மி, தற்படம் என புதுசு புதுசா தமிழ்லயும் பேரும் வைக்குறாங்க.மொ: அட! இதுக்கு செல்ஃபின்னு பேரு வச்சது யாரு?ஷா: அதுவா! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் ஹோப் (Nathan Hope). அவரு தன்னோட படத்தை அவரே எடுத்து 2002 ல செல்ஃபி'ங்கற பேர்ல இணையதளத்துல போட்டாரு. அதுக்கு அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா இது பழக்கத்துக்கு வந்தது.மொ: நமக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குதே. எங்க இருந்துதான் இப்படி வார்த்தை எல்லாம் யோசிக்குறாங்களோ தெரியல?ஷா: இப்போ இந்த வார்த்தைய சொல்லாத ஆளே கிடையாது தெரியுமா!மொ: ஓ! அவ்ளோ பிரபலமான வார்த்தையா அது?ஷா: ஆமா! ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (Oxford Dictionary) 2013-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக இதைத் தேர்ந்து எடுத்ததுன்னா பாத்துக்கோ!மொ: என்னென்னமோ சொல்ற. மொபைல்போனை, நான் அதிகமா பயன்படுத்த மாட்டேன். அதான் எனக்குத் தெரியல சாந்தி.ஷா: அதுவும் சரிதான்! படிக்குற நேரங்களில் மொபைல் ரொம்ப பயன்படுத்த கூடாது. எக்குத் தப்பான இடங்கள்ல நின்னு செல்ஃபி எடுக்கறேன்னு சொல்லி எலும்பை உடைச்சுக்காம கவனமா எடுக்கணும். இதெல்லாம் போக புதுசா வர்ற விஷயங்களை ஆர்வமா தெரிஞ்சுக்கணும். சரியா?மொ: சரி. அதெல்லாம் இருக்கட்டும். வா செல்ஃபி எடுக்கலாம்! ஷா: கொஞ்சம் பொறு! ரெண்டு பேரு சேந்து எடுக்கற படத்தை செல்ஃபினு சொல்லலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.