உள்ளூர் செய்திகள்

68 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தாய் - மகன்

1950 இல் நடந்த வடகொரியா - தென்கொரியா போரால், பல ஆயிரம் குடும்பங்கள் பிரிந்தன. மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் இணைய 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 89 குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்தவாரம் நடந்தது. 4 வயதில் தன் தாய், தந்தையை விட்டுப்பிரிந்த ஷாங், வடகொரியாவில் வேறு ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார். அவரது தாய் லீகுயும் ஸியோம், தென்கொரியாவில் வசிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தன் மகனை லீகுயும் கண்டுகொண்டு, கட்டிப்பிடித்து அழுதது, காண்போரின் கண்களைக் குளமாக்கியது. லீகுயுமிற்கு வயது 92. அவரது மகனான ஷாங்கின் வயது 72.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !