சீறும் புதிய ரயில்கள்!
ஜன. 11 - இந்தியாவில் பயணிகளுக்காக, தினசரி ஓடிக் கொண்டு இருக்கும் ரயில்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இவற்றின் சராசரி வேகம் மணிக்கு 100 கி.மீ. முக்கிய நகரங்களுக்கிடையில் புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வரையிலான வேகத்தில் இயங்கும்.டில்லி - ஆக்ரா, டில்லி - கான்பூர், சென்னை - ஹைதராபாத், நாக்பூர் - செகந்திராபாத், மும்பை -கோவா உள்ளிட்ட தடங்களில் இந்த அதிவிரைவு ரயில்கள் ஓடப்போகின்றன. அதிவேக ரயில் என்பதை குறிக்கும் விதத்தில், சிறுத்தையின் உடல் வண்ணத்தை ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தில் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள், பஞ்சாப் மாநிலம், கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாராகிக்கொண்டு உள்ளன.