இனிது இங்கிலீஷ்
6 தகவல்கள்ஆங்கிலத்தில் நாம் ஒரு சொற்றொடர் சொல்வோம். 'Long time no see' என்பதுதான் அது. இந்தச் சொற்றொடர் இலக்கணப்படி சரியானதல்ல. அமெரிக்க அல்லது சீன மொழியில் 'பாத்து ரொம்ப நாளாச்சு' என்பதற்கு இணையான சொற்றொடர்கள் இருக்குமல்லவா? அவற்றிற்கான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்புதான் 'லாங் டைம் நோ ஸீ'.ஆங்கில அகராதியில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 4,000 சொற்கள் புதிதாகச் சேர்க்கப்படுகின்றன.ஆங்கில மொழியில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரு சொற்கள்: நான், நீ ஆகியவை. அதாவது I and You.ஆங்கிலச் சொற்களை மொத்தமாகக் கணக்கெடுத்துப் பார்த்தால், ஓர் எழுத்து 11% இடம்பெறுகிறது. அந்த எழுத்து, E.ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படும் அடைமொழி: Good. Set என்கிற சொல்லுக்குத்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொருள் உள்ளது.