உள்ளூர் செய்திகள்

நோபல் பரிசுகள் 2016

இயற்பியல்: அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் தௌலெஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்ட்ர்லிட்ஸ். குவான்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் (Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.வேதியியல்: ஜான் பியர் சாவேஜ் (பிரான்ஸ்), சர் பிரேசர் ஸ்டோடர்ட் (ஸ்காட்லாந்து), பெர்னர்ட் ஃபெரிங்கா (நெதர்லாந்து). மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக, அதாவது நேனோ- மெஷின்களை வடிவமைத்ததற்காக வழங்கப்படுகிறது. பொருளாதார அறிவியல்: ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட், மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம். வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக வழங்கப்படுகிறது.மருத்துவம்: ஜப்பான் விஞ்ஞானி யொஷினோரி ஒசுமி. Autophagy எனப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடு களின் முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார்.அமைதி: கொலம்பியா நாட்டு அதிபர் மேனுவல் சாண்டோஸ். 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு முயற்சி கண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !