உள்ளூர் செய்திகள்

எண்ணும் எழுத்தும்: எத்தனை பேர்?

ஒரு பெரிய நிறுவனத்தில் தேர்வு வைத்து வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள்.மூன்று சுற்று தேர்வுகள் நடைபெறுகின்றன.முதல் சுற்றில், வந்தவர்களில் 10ல் 9 பங்கு நபர்கள் நீக்கப்படுகிறார்கள்.மீதியிருந்த 10ல் 1 பங்கு பேர், இரண்டாவது சுற்றில் கலந்துகொள்கிறார்கள். அதில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி ஆகிறார்கள். இந்த 40 சதவீதம் பேர், மூன்றாவது சுற்றில் கலந்துகொண்டதில், 80 சதவீதம் பேர் தேர்வாகிறார்கள். கேள்வி: 64 பேரை வேலைக்கு எடுக்க நடத்தப்பட்ட தேர்வுக்கு, எத்தனை பேர் வந்திருப்பார்கள்?விடை: 2000தீர்வு: தேர்வுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை x என்க. முதல் சுற்றில் வெற்றிப் பெற்றவர்கள் = x × 1/10இரண்டாவது சுற்றில் தேர்ச்சிப் பெற்றவர்கள் = x/10 × 40/100மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றவர்கள் = x/10 × 40/100 × 80/100மொத்தமாக 64 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.அதாவது,x/10 × 40/100 × 80/100 = 64=> 3200x/100000 = 64=> 32x/1000 = 64=> x = 64/32 × 1000=> x = 2000ஆக, தேர்வுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை = 2000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !