உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா ரெடி

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடக்கிறது. இதில் ஹாக்கி போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டது. இந்திய ஆண்கள் அணி, உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பானுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை (2020, ஜூலை 25) சந்திக்கிறது. அடுத்து ஜூலை 26இல் 'நம்பர் 1' ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஸ்பெயின் (ஜூலை 28), நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா (ஜூலை 30), ஜப்பானுடன் (ஜூலை 31) மோத உள்ளது. பெண்கள் பிரிவில் உலகத் தரவரிசையில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் அட்டவணைப்படி 'ஏ' பிரிவில் உள்ள இந்திய அணி, முதல் போட்டியில் ஜூலை 25இல் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜெர்மனி (ஜூலை 27), பிரிட்டன் (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 31), தென் ஆப்பிரிக்காவுடன் (ஆகஸ்ட் 1) மோத உள்ளது. தங்கப் பதக்கத்துக்கான போட்டி ஆகஸ்ட் 6 (ஆண்கள்), ஆகஸ்ட் 7இல் (பெண்கள்) நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !