நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து, நாட்டிலேயே முதன்முறையாக, 410 மீட்டர் தூரத்திற்கு, 'ஹைப்பர் லூப் டெஸ்ட் டிராக்'கை, சென்னையின் எந்தப் பகுதியில், இந்திய ரயில்வே அமைத்துள்ளது?அ. வில்லிவாக்கம்ஆ. அண்ணனூர்இ. தையூர்ஈ. அம்பத்தூர்2. தமிழகம் உட்பட நாடு முழுவதும் புதிதாக எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?அ. 100ஆ. 50இ. 65ஈ. 85 3. 'வங்கதேசத்தின் தந்தை' என்று அழைக்கப்பட்ட, மறைந்த முன்னாள் பிரதமரான யாரின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க, அந்த நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது?அ. ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆ. முகம்மது மன்சூர் அலிஇ. தஜுதீன் அஹமதுஈ. மெளதத் அஹமது4. இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, எந்தத் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க, ஐக்கிய நாடுகள் பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது?அ. டிசம்பர் 21 ஆ. டிசம்பர் 15இ. டிசம்பர் 10ஈ. டிசம்பர் 125. விண்கலங்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளில், எந்த வகையான இன்ஜினைப் பயன்படுத்தும் ஒருசில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது?அ. பை-புரோபலன்ட்ஆ. எலெக்ட்ரோ தெர்மல்இ. கிரையோஜெனிக்ஈ. சோலார்6. இந்தியாவில், கடந்த 90 ஆண்டுகளாக இருந்த எந்தச் சட்டத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'வாயுயான் விதேயக்' மசோதாவுக்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்?அ. மருத்துவம்ஆ. கப்பல்இ. போக்குவரத்துஈ. விமானம் 7. செஸ் உலகின் இளம் சாம்பியன் ஆகி சாதனை படைத்துள்ள இந்திய வீரர்?அ. பிரக்யானந்தாஆ. குகேஷ்இ. விதித் குஜ்ராத்திஈ. அர்ஜுன் எரிகேசி8. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?அ. உர்ஜித் படேல்ஆ. சஞ்சய் மல்ஹோத்ராஇ. ரகுராம் ராஜன்ஈ. சுப்பாராவ்விடைகள்: 1. இ, 2. ஈ, 3. அ, 4. அ, 5. இ, 6. ஈ, 7. ஆ. 8. ஆ