நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள, ரெப்போ வட்டி விகித குறைப்பில், மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் வட்டியில் எவ்வளவு சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதமாகியுள்ளது?அ. 0.15ஆ. 0.25 இ. 0.20ஈ. 0.182. உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலையை அமுல் நிறுவனம், ரூ.600 கோடி மதிப்பீட்டில், இந்தியாவின் எந்த நகரத்தில் அமைக்கிறது?அ. கோல்கட்டாஆ. மும்பைஇ. சென்னைஈ. பெங்களூரு3. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எந்த மாநில முதல்வரான பைரேன் சிங், தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுக்கவும், உட்கட்சி நெருக்கடியைத் தவிர்க்கவும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்?அ. மணிப்பூர்ஆ. சிக்கிம்இ. நாகாலாந்துஈ. மிசோரம்4. இலங்கையில், மின் நிலையத்திற்குள் புகுந்த எந்த விலங்கு செய்த சேட்டையால், சமீபத்தில் நாடு முழுவதும், 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது?அ. யானைஆ. எலிஇ. குரங்குஈ. பூனை5. அமெரிக்காவின் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றான, 1 சென்ட் நாணயத்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும்படி கருவூலத்துறைக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாணயத்தின் பெயர் என்ன?அ. யூரோன்ஆ. டென்னிஇ. டாலர்ஈ. பென்னி6. தமிழகத்தில் உள்ள, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகள், என்னவாகச் சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன?அ. மாநகராட்சிஆ. ஊராட்சிஇ. நகராட்சிஈ. உள்ளாட்சி7. உத்தரகாண்டில் நடந்த, 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஆதர்ஷ் ராம், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?அ. தமிழகம் ஆ. உத்தரப்பிரதேசம்இ. ஆந்திரம்ஈ. தெலங்கானா8. அணுமின் உற்பத்திக்கான சிறிய அணு உலைகளைக் கூட்டாகத் தயாரிப்பது தொடர்பாக, எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?அ. அமெரிக்காஆ. பிரான்ஸ் இ. ஜப்பான்ஈ. ரஷ்யாவிடைகள்: 1. ஆ, 2. அ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. இ, 7. அ. 8. ஆ