நான்கில் ஒன்று சொல்
உலகில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, எந்த நாட்டின் உயரிய, 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் 3' என்ற விருது சமீபத்தில் வழங்கப்பட்டது?அ. ஹங்கேரிஆ. அயர்லாந்துஇ. சைப்ரஸ்ஈ. மால்டா2. சுவிஸ் வங்கிகளில் இந்திய டிபாசிட், கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து, தற்போது எவ்வளவு கோடி ரூபாயாக உள்ளது?அ. ரூ.45,200 கோடிஆ. ரூ.37,600 கோடி இ. ரூ.15,600 கோடிஈ. ரூ.1000 கோடி3. லண்டனைச் சேர்ந்த, 'குவாக்கரெல்லி சைமன்ட்ஸ்' எனும் தனியார் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, உலகின் சிறந்த பல்கலைகள் பட்டியலில், 14வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, எந்த நாட்டில் அமைந்துள்ளது?அ. அமெரிக்காஆ. ரஷ்யாஇ. நெதர்லாந்துஈ. பிரான்ஸ்4. யு.பி.எஸ்.சி. இறுதித் தேர்வு வரை வந்து, நேர்முகத் தேர்வுக்கு முன்னேற முடியாதவர்களை, மத்திய அரசின் பிற துறைகள், தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தும் வகையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ள திட்டத்தின் பெயர் என்ன?அ. முத்ரா யோஜனாஆ. பிஎம் கிசான்இ. சேது முத்ராஈ. பிரதிபா சேது5. உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் எந்தத் துறையுடன், சென்னை ஐ.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?அ. வருவாய்ஆ. வேளாண்மை இ. பொதுப்பணிஈ. எரிசக்தி6. சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் (ஐ.சி.சி.)சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனையருக்கான தரவரிசைப் பட்டியலில், பேட்டர் தரவரிசையில், 727 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை?அ. ஹர்மன்பிரீத் கவுர்ஆ. தீப்தி ஷர்மாஇ. ஸ்மிருதி மந்தனாஈ. ஷஃபாலி வர்மாவிடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. ஆ, 6. இ.