உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இந்தியாவின் தார்வாட் விவசாய பல்கலையின் எந்த இரு உணவுப் பொருட்கள், 'ஆக்சியம் - 4' திட்ட ஆராய்ச்சிக்காக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன?அ. தக்காளி, பீட்ரூட்ஆ. கடலைப்பருப்பு, கடுகுஇ. பாசிப்பயறு,வெந்தய விதைஈ. உளுந்து, சீரகம்2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள், வெள்ளித்திரையிலும் தமது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன?அ. கர்நாடகம்ஆ. மேற்குவங்கம்இ. சட்டீஸ்கர்ஈ. மிசோரம்3. மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த, தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளிக்கல்வித்துறை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள திட்டத்தின் பெயர் என்ன?அ. ஸ்நாக்ஸ் பெல்ஆ. வாட்டர் பெல்இ. டிரிங்க் பெல்ஈ. தண்ணீர் அருந்து4. நாட்டிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில், மொபைல்போன் செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறையை, சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது?அ. பீகார்ஆ. தமிழகம்இ. குஜராத்ஈ. தெலங்கானா5. இந்தியாவின் உளவு அமைப்பான, 'ரா' எனப்படும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி யார்?அ. ஏ.கே.வர்மாஆ. சங்கரன் நாயர்இ. அமர்ஜித் சிங்ஈ. பராக் ஜெயின்6. உஸ்பெகிஸ்தானில் நடந்த உஸ் செஸ் கோப்பை தொடரில், மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்?அ. மேக்னஸ் கார்ல்சன்ஆ. குகேஷ்இ. பிரக்ஞானந்தாஈ. அர்ஜுன் எரிகேசிவிடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஆ, 4. அ, 5. ஈ, 6. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !