உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. பி.எஸ். ஏரோநாட்டிக்கல், பி.எஸ். பொருளாதாரம் ஆகிய இரண்டு புதிய, 'ஆன்லைன்' படிப்புகள், எந்தக் கல்வி நிறுவனத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன?அ. அண்ணா பல்கலைஆ. சென்னை பல்கலைஇ. ஐ.ஐ.டி. சென்னை ஈ. ஐ.ஐ.எம். திருச்சி2. தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக, மூத்த அரசியல்வாதியும், பூம்ஜைதாய் கட்சியின் தலைவருமான யார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்?அ. பும்தம் வெச்சாய்ச்சேஆ. ஸ்ரத்தா தாவிசின்இ. பிரயுத் ஹன்-ஓ-ஹாஈ. அனுடின் சார்ன்விரகுல் 3. பார்லிமென்ட் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, பதவி விலகச் சொந்தக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து, எந்த நாட்டின் பிரதமரான ஷிகெரு இஷிபா சமீபத்தில் பதவி விலகினார்?அ. சீனாஆ. ஜப்பான் இ. மலேசியாஈ. கென்யா4. ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு உள்ள, எந்தப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் உள்ளதாக, அந்த நாட்டின் மருந்து மற்றும் உயிரியல் துறையின் தலைவர் வெரோனிகா தெரிவித்துள்ளார்?அ. பெருங்குடல்ஆ. ரத்தம்இ. நுரையீரல்ஈ. சிறுகுடல்5. இத்தாலியில் நடந்த, 82வது வெனிஸ் திரைப்பட விழாவில், 'ஓரிசோன்டி' (Orizzonti) என்ற சிறப்புப் பிரிவில், 'சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ்' என்ற தன் முதல் திரைப்படத்திற்கு, சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று, இந்தப் பிரிவில் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர்?அ. அனுபமா சர்மாஆ. ஸ்வேதா தாஸ்இ. அருந்ததி ராய்ஈ. அனுபர்ணா ராய் 6. பீகாரில் நடந்த, ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் இறுதிப் போட்டியில், எந்த அணியை வீழ்த்தி, இந்தியா கோப்பையை வென்றது?அ. தென் கொரியா ஆ. சுவீடன்இ. ரஷ்யாஈ. தென் ஆப்பிரிக்காவிடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. ஈ, 6. அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !