நான்கில் ஒன்று சொல்
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?அ. ரகுராம் ராஜன்ஆ. கிஷ் சந்திர முர்முஇ. சக்திகாந்ததாஸ்ஈ. ஜகன்னாதன்2. இந்திய குடும்பங்களின் மொத்தச் சொத்து மதிப்பு, கடந்தாண்டு எவ்வளவு சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'அலையன்ஸ் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது?அ. 25.50 சதவீதம்ஆ. 22.50 சதவீதம்இ. 14.50 சதவீதம்ஈ. 12.20 சதவீதம்3. சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டாத காரணத்தால், பொருளாதாரத் தடை விதிப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?அ. ஈராக்ஆ. ஈரான்இ. சௌதி அரேபியாஈ. குவைத்4. உலக நாடுகளின் மொத்த கடன்தொகை, நடப்பாண்டு ஜூலை நிலவரப்படி, இதுவரை இல்லாத சாதனையாக, எவ்வளவு ரூபாயாக அதிகரித்துள்ளதாக, இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் பைனான்ஸ் என்ற அமைப்பு, தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது?அ. ரூ.15,500 கோடிஆ. ரூ.33,272 லட்சம் கோடிஇ. ரூ.55,000 கோடிஈ. ரூ.29,800 லட்சம் கோடி 5. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எந்த நெட்வொர்க் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார்?அ. 2 ஜிஆ. 3 ஜிஇ. 4 ஜிஈ. 5 ஜி6. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த ஆசிய 'டி-20' தொடர் கோப்பையை, சமீபத்தில் இந்திய அணி எத்தனையாவது முறையாக வென்றது?அ. ஒன்பதுஆ. ஐந்துஇ. மூன்றுஈ. நான்குவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. ஆ, 4. ஈ, 5. இ, 6. அ.