உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்!

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவான, மேம்படுத்தப்பட்ட பதிப்பான எந்த ஹெலிகாப்டரை, மத்திய விமான போக்குவரத்துத் துறை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது?அ. துருவ் பிஎஸ்ஆ. துருவ் என்ஜிஇ. துருவ் விஷ்ஈ. துருவ் யாஷ்2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும், செய்தித்தாள் வாசிப்புக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது?அ. தமிழ்நாடுஆ. மேற்குவங்கம்இ. உத்தரப்பிரதேசம்ஈ. குஜராத்3. இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.) எந்தப் பொருளுக்கான, 'ஐ.எஸ். 19412:2025' என்ற தரக் குறியீட்டை, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது?அ. சாம்பிராணிஆ. கற்பூரம்இ. அகர்பத்திஈ. சந்தனம்4. சீனா - ஜப்பான் இடையே, 1973இல் நடந்த போரில், சீன போர்க்களத்தில் பணியாற்றி பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் துவாரகநாத் கோட்னியைக் கெளரவிக்கும் விதமாக, சீன அரசு அவர் பெயரில் நினைவு மண்டபம் திறந்துள்ளது. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?அ. இந்தியாஆ. பங்களாதேஷ்இ. இலங்கைஈ. ஜப்பான்5. நாட்டின் இளம் நகராட்சி தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்ட பாலா நகராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, 21 வயதான இளம் பெண் யார்?அ. மீரா குமார்ஆ. சந்தியா சென்இ. சுப்ரிதா வர்மாஈ. தியா பினு6. டில்லியில் நடந்த தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 'டிராப்' பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மத்தியப்பிரதேச வீராங்கனை?அ. மனு பாக்கர்ஆ. ரஹி சர்னோபாத்இ. நீரு தண்டாஈ. பாயல் கட்ரிவிடைகள்: 1. ஆ, 2. இ, 3. இ, 4. அ, 5. ஈ, 6. இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !