நான்கில் ஒன்று சொல்!
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. தென் சீன கடலை ஒட்டிய கடற்கரைப் பகுதியில், புதிதாக இயற்கை எரிவாயு படிமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, கிழக்கு ஆசியாவின் எந்த நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்?அ. தென்கொரியாஆ. தைவான்இ. மியான்மர்ஈ. பிலிப்பைன்ஸ் 2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள சிம்லாவில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும், ஹெலிகாப்டர் டாக்சி சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது?அ. உத்தரகாண்ட்ஆ. அருணாச்சலப் பிரதேசம்இ. ஹிமாச்சலப் பிரதேசம் ஈ. சிக்கிம்3. பாரதிய ஜனதா கட்சியின் 12வது தேசிய தலைவராகப் புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ளவர்?அ. அமித்ஷாஆ. நிதின் நபின் இ. ராஜ்நாத் சிங்ஈ. பியுஷ் கோயல் 4. கடந்த ஆண்டு இறுதியில், எந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை, முந்தைய ஆண்டை விட (140.5 கோடி) 33.9 லட்சம் குறைந்து, தொடர்ந்து நான்காவது ஆண்டாக, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது?அ. இந்தியாஆ. இந்தோனேசியாஇ. அமெரிக்காஈ. சீனா5. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளில், அதிகளவாக 31,517 ஆலைகளுடன், எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?அ. கர்நாடகம்ஆ. தெலங்கானா இ. தமிழ்நாடு ஈ. மத்தியப் பிரதேசம்6. எகிப்தின் கெய்ரோவில் நடந்த சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?அ. துளசிமதி ஆ. திவ்யாஇ. செல்விஈ. காயத்ரிவிடைகள்: 1. ஈ, 2. இ, 3. ஆ, 4. ஈ, 5. இ, 6. அ.