உள்ளூர் செய்திகள்

நூற்றுக்கு நூறு: நடு வீடு எது?

A முதல் G வரையிலான ஏழு வீடுகள் மாறி மாறி வரிசையாக அமைந்துள்ளன என்று வைத்துக்கொள்வோம்.* A என்ற வீடு, B-க்கு வலது பக்கத்திலும், Dக்கு இடது பக்கத்திலும் இருக்கிறது.* F என்ற வீடு, E-க்கு வலது பக்கத்திலும், G-க்கு இடது பக்கத்திலும் இருக்கிறது. * C என்ற வீடு, E-க்கு இடது பக்கத்திலும், Dக்கு வலது பக்கத்திலும் இருக்கிறது. A முதல் G வரையிலான ஏழு வீடுகளில், எந்த வீடு நடுவில் அமைந்திருக்கும்?விடை: Cதீர்வு:கேள்வியில் சொன்ன குறிப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தால், வீடுகளின் சரியான வரிசை இப்படி இருக்கும்: B → A → D → C → E → F → Gஇந்த வரிசையில் நடுவில் (நான்காவது இடத்தில்) அமைந்திருக்கும் வீடு 'C'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !