உள்ளூர் செய்திகள்

பாம் பாம் கரடி... மெது மெது கரடி... இது மினி கரடி

தேவையான பொருட்கள்

1. பாம் பாம் பந்துகள் சில (-பெரிய மற்றும் சிறிய அளவுகளில்) 2. அலங்கரிக்கும் ஸ்டோன் 3. அனபாண்ட் பசை (இந்தப் பசையை கையாளும்போது கவனம் தேவை! கைகளில் பசை படாத வண்ணம் கையாள வேண்டும்.)நம்மில் சிலர் பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடித்து விளையாடி இருப்போம். உள்ளங்கை அளவே, இருக்கும் ஒரு குட்டிக் கரடி பொம்மையை பார்த்திருக்கிறீர்களா? அதைத்தான் இந்த வாரம் செய்யப் போகிறோம். 01. இரண்டு பெரிய பாம் பாம் பந்துகளைப் பசை தடவி ஒட்ட வேண்டும். குட்டிக் கரடியின் தலைப் பகுதியும் உடல் பகுதியும் தயார் ! 02. இரண்டு சிறிய பாம் பாம் பந்துகளைத் தலை பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக ஒட்டிவிட்டால், காதுகளுடன் கூடிய தலைப்பகுதியும் தயார். 03. தலைப் பகுதியின் முன்புறம், ஒரு சிறிய பந்தினை மூக்காக ஒட்டிவிட வேண்டும்.04. இரண்டு சிறிய பந்துகளை, உடல் பகுதியின் பக்கவாட்டில், பக்கத்திற்கு ஒன்றாக ஒட்டிவிட்டால், கைகளும் தயார். 05. அடுத்து இரண்டு சிறிய பந்துகளை, உடல் பகுதியின் கீழ்ப்புறம் முன்னோக்கி ஒட்டிவிட கால்களும் முளைத்துவிடும்.06. மூக்கிற்கு மேலே ஸ்டோன் கொண்டு கண்களை வைத்து விட்டால்... குட்டி கரடி ரெடி... பிறகென்ன, மினி கரடியை வைத்து விளையாட வேண்டியதுதான்!- ஓவியா டீச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !