உள்ளூர் செய்திகள்

காகிதக் கண்ணாடி!

நண்பனைக் கூப்பிடுங்கள். எரியும் மெழுகுவத்தியின் சுடர் ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைக் காட்டுங்கள். 'ப்பூ… இதென்ன வித்தை' என்பான். “இதே பிரதிபலிப்பை, சாதாரணமான காகிதத்தில் காட்டினால் என்ன தருவாய்?” என்று பந்தயம் கட்டுங்கள். எப்படிச் செய்வது?ஒரு மெழுகுவத்தியை ஏற்றிக்கொள்ளுங்கள். நல்ல வழவழப்பான வெள்ளைக் காகிதத்தை, தீபச் சுடரின் நேராக கிடைமட்டமாக வையுங்கள். கண்களைக் காகிதத்தின் மட்டத்தில் வைத்துப் பார்க்கச் சொல்லுங்கள். காகிதத்தில் மெழுகுவத்தியின் சுடர் நன்றாகப் பிரதிபலிப்பதை நண்பனைப் பார்க்க வைத்து மகிழுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !