உள்ளூர் செய்திகள்

பட்டம் சதுரங்கப் போட்டி

மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, நமது 'பட்டம்' நாளிதழ் சார்பாக, பிரம்மாண்டமான 'பட்டம் சதுரங்கப் போட்டி 2024' வரும் ஆகஸ்ட் 10, 2024 அன்று, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, சென்னையில் நடைபெற இருக்கிறது. 9, 11, 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்ட மாணவ மாணவியருக்கு, போட்டிகள் தனித்தனியே நடைபெறும்.இவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறக்கூடியவர்களுக்கு ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்படும். வெற்றி பெறக்கூடிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கும் கோப்பைகள் உண்டு.மாணவர்களுக்கான கோப்பைகள் 105, பள்ளிகளுக்கான கோப்பைகள் 30, வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு 30 என மொத்தம் 165 பரிசுகள் உண்டு. மொத்த பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாய். இந்தப் போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை.சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள வி.ஐ.டி. சென்னை வளாகத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10 மணிக்குள் www.chessentry.in, www.easypaychess.com ஆகிய வலைதளங்களில் போய் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் வேண்டுவோர் தொடர்புகொள்க: 9751136644, 8098486599.மாணவர்களே, உங்கள் சதுரங்கத் திறமையை வெளிப்படுத்த வாருங்கள், வெற்றி பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !